Inhalers A-Z

இன்ஹேலர் வகைகள்

ஆஸ்த்மா மற்றும் சிஓபீடி போன்ற பல சுவாசப் பிரச்சனைகளுக்கு ஆரம்ப நிலை சிகிச்சையாக உலகம் முழுவதும் இன்ஹேலர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்ஹேலர்கள் மூலமாக எடுக்கக் கூடிய மருந்தளிப்புகளில் இரண்டு வகைகள் உள்ளன - கன்ட்ரோலர்கள் (இவை உங்களின் அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகிறது) மற்றும் ரிலீவர்கள் (இவை ஒரு அட்டாக் இருக்கும் பட்சத்தில் உடனடி நிவாரணம் வழங்குகிறது). ஆஸ்த்மா மற்றும் சிஓபீடி நோய்க்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பான மற்றும் மிக செயல்திறனுள்ள வழிமுறை இன்ஹேலர்கள் தான் என நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் உட்சுவாசிக்கப்படும் மருந்து நுரையீரல்களை நேரடியாக சென்றடைகிறது.

இன்ஹேலர் உபகரணங்களை பரவலாக நான்கு வகைகளின் கீழ் பிரிக்க முடியும் - ப்ரெஷரைஸ்ட் மீட்டர்ட் டோஸ் இன்ஹேலர்ஸ் (பீஎம்டிஐஎஸ்), ட்ரை பவுடர் இன்ஹேலர்ஸ் (டிபீஐஎஸ்), ப்ரெத் ஆக்சுவேட்டட் இன்ஹேலர்ஸ் (பிஏஐஎஸ்) மற்றும் நெபுலைசர்ஸ்.

1) ப்ரெஷரைஸ்ட் மீட்டர்ட் டோஸ் இன்ஹேலர்ஸ் (பீஎம்டிஐஎஸ்)

பம்ப் இன்ஹேலர்கள் என்றழைக்கப்படும் இவையே மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் இன்ஹேலர் உபகரணங்கள் ஆகும். இவை ப்ரொபெல்லன்ட்-அடிப்படையிலானது மற்றும் ஒரு பிரத்யேக, முன்-அளவிட்ட மருந்தளிப்பு அளவை நுரையீரல்களுக்கு ஏரோசெல் ஸ்பிரே வடிவில் விநியோகிக்கிறது; இதனை உட்சுவாசிக்க வேண்டும்.அது ஒவ்வொரு தடவை இயக்கும் போதும் மறுஉற்பத்தியாகும் டோஸ்களை விடுவிக்கிறது. இதன் அர்த்தமாவது ஒவ்வொரு தடவையும் ஒரே அளவு டோஸ் தான் விநியோகிக்கப்படுகிறது. இந்த இன்ஹேலர்கள், மருந்து விடுவிக்கப்படுவதை தூண்டி விட நோயாளி உட்சுவாசிக்க வேண்டும் என்பதை சார்ந்திருப்பதில்லை. அவற்றுக்கு கேனிஸ்டர் இயக்கம் மற்றும் டோசை உட்சுவாசித்தல் இடையே ஒருங்கிணைப்பு இருப்பது அவசியம். இன்னும் எளிமையாக சொல்வதென்றால், கேனிஸ்டர் அழுத்தப்பட்டு டோஸ் விடுவிக்கப்படும் நேரத்தில் நீங்கள் சரியாக உட்சுவாசிக்க வேண்டியது கட்டாயம். பீஎம்டிஐஎஸ் ஒரு டோஸ் கவுன்டர் உடன் வருகிறது, இதனால் உபகரணத்தில் மீதமிருக்கும் பஃப்களின் எண்ணிக்கையை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்வது சுலபமாகும்.  

இணைப்பு: https://www.youtube.com/watch?v=qFXf7RUavMM

பீஎம்டிஐ பயன்படுத்துவதை எளிதாக்க, அவற்றுடன் சேர்த்து ஆட்-ஆன் ஆக பயன்படுத்தும் குறிப்பிட்ட சில சாதனங்களும் கிடைக்கின்றன.

ஜீரோஸ்டட் விடீ ஸ்பேசர்

இந்த சாதனம், பீஎம்டிஐ இயக்கப்பட்டப் பிறகு சிறிது நேரத்துக்கு மருந்தை தக்க வைக்கிறது. இதனால் கேனிஸ்டர் இயக்கப்படும் அதே நேரத்தில் நீங்கள் கச்சிதமாக உட்சுவாசிக்கவில்லை என்றாலும் கூட, இந்த ஸ்பேசர் மருந்தளிப்பு அனைத்தையும் நீங்கள் உட்சுவாசிக்க உதவுகிறது.

இணைப்பு: https://www.youtube.com/watch?v=lOv0ODD6Vd4

பேபி மாஸ்க்

ஜீரோஸ்டட் விடீ ஸ்பேசர் சாதனத்தின் மவுத்பீசை உங்களால் அல்லது உங்கள் குழந்தையால் சரியாக வாயில் பிடித்துக் கொள்ள முடியவில்லை எனில், நீங்கள் பேபி மாஸ்க்-ஐ ஜீரோஸ்டட் விடீ ஸ்பேசர் உடன் பொருத்தி அதன் பிறகு பீஎம்டிஐ-யை பயன்படுத்த முடியும்.

இணைப்பு: https://www.youtube.com/watch?v=4y-PG500fFU

ஹஃப்பஃப் கிட்

ஸ்பேசர் மற்றும் பேபி மாஸ்க் ஒரு ஹஃப்பஃப் கிட்-ல் முன்பொருத்தப்பட்ட நிலையில் வருகிறது. அது ஏற்கனவே பொருத்தப்பட்டு வருவதால், ஒரு அவசரநிலை ஏற்படும் பட்சத்தில் மருந்தளிப்பை வேகமாக விநியோகிக்க உதவுகிறது மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

இணைப்பு: https://www.youtube.com/watch?v=emLVSoIwKmg

 

2) ட்ரை பவுடர் இன்ஹேலர்ஸ் (டிபீஐஎஸ்)

இந்த வகையான இன்ஹேலர்கள், ஒரு உலர்ந்த பவுடர் வடிவில் மருந்தை விநியோகிக்கிறது. டிபீஐகள் மூச்சால் இயக்கப்படும் சாதனங்கள் என்பதால், அது சாதனத்தில் இருந்து மருந்தை விடுவிப்பதற்காக நீங்கள் உட்சுவாசிப்பதை சார்ந்துள்ளது. பீஎம்ஐடிகள் உடன் ஒப்பிடுகையில் இவைகள் பயன்படுத்த சுலபமானது, ஏனெனில் அவைகளுக்கு ப்ரொபெல்லன்ட் மற்றும் ஒருங்கிணைத்தல் தேவையில்லை.  பொதுவாக, டிபீஐகள் ஒற்றை டோஸ் உபகரணங்களாக கிடைக்கிறது, இருந்தாலும் பல டோஸ் டிபீஐகளும் கிடைக்கிறது.

ரிவோலைஸர்

ரிவோலைஸர் டிபீஐ உடன் பயன்படுத்த சுலபமானது, வழக்கமாக‌ பல்வேறு ரோட்டாகேப்கள் உடன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு துல்லியமான மருந்தளிப்பு டோஸ் மற்றும் உட்சுவாசிக்கும் ஃப்ளோ விகிதம் குறைவாக இருக்கும் போது கூட‌ மிகவும் செயல்திறன் உள்ள பரவலை வழங்குகிறது.

இணைப்பு: https://www.youtube.com/watch?v=7WYrSinFtgY

ரோட்டாஹேலர்

முற்றிலும் வெளிப்படையாக தெரியும் என்பதால், மருந்தில் முழு டோசையும் நீங்கள் உட்சுவாசித்து விட்டதை உறுதிப்படுத்த ரோட்டாஹேலர் உதவுகிறது.

இணைப்பு:  https://www.youtube.com/watch?v=mDXwrPCRl_M

 

3 ) ப்ரெத் ஆக்சுவேட்டட் இன்ஹேலர்ஸ் (பிஏஐஎஸ்) 

பீஎம்டிஐ தொழில்நுட்பத்தில் ஒரு மேம்பட்ட வடிவமான இந்த ப்ரீத் அக்சுவேட்டட் இன்ஹேலர், ஒரு பீஎம்டிஐ மற்றும் டிபீஐ ஆகியவற்றின் சாதகங்களை ஒருங்கே கொண்டது. நீங்கள் மூச்சை உள்ளிழுப்பதை ஒரு அக்சுவேட்டர் மூலமாக பிஏஐ உணர்கிறது, மற்றும் மருந்தை தானாகவே விடுவிக்கிறது.

ஆட்டோஹேலர்

ஒரு பீஎம்டிஐ மற்றும் டிபீஐகளில் சிலவற்றை விட‌ பயன்படுத்துவதற்கு எளிதானது ஒரு ஆட்டோஹேலர். இதனை எல்லோரும் - குழந்தைகள், வயது வந்தவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருமே செயல்திறனுடன் நன்றாக பயன்படுத்த முடியும்.

இணைப்பு: https://www.youtube.com/watch?v=P0oD2VOaLVY

4) நெபுலைசர்ஸ்

பீஎம்டிஐகள் மற்றும் டிபீஐகள் போல் அல்லாமல், நெபுலைசர்கள் திரவ மருந்தளிப்பை பொருத்தமான ஏரோசெல் துளிகளாக மாற்றுகிறது, இது உட்சுவாசித்தலுக்கு மிக ஏற்றதாக இருக்கிறது. நெபுலைசர்களுக்கு ஒருங்கிணைப்பு தேவைப்படாது மற்றும் மருந்தை வேகமாகவும் மற்றும் செயல்திறனுடனும் நுரையீரல்களுக்குள் ஒரு புகைமூட்டம் வடிவில் விநியோகிக்கிறது. ஆஸ்த்மா தாக்கு ஏற்படும் போது, சிசுக்கள்,  குழந்தைகள், முதியவர்கள், கவலைக்கிடமான, சுயநினைவற்ற நோயாளிகள் மற்றும் ஒரு பீஎம்டிஐ அல்லது டிபீஐ-யை செயல்திறனுடன் பயன்படுத்த முடியாதவர்களுக்கு நெபுலைசர்கள் உசிதமானது.

இணைப்பு:  https://www.youtube.com/watch?v=OrsIbHWxVlQ